வீட்டுக்குள் புகுந்த பாம்பை தீயணைப்புத்துறை வீரர்கள் லாவகமாக பிடித்து காட்டில் விட்டனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள குவளைக்கால் கிராமம் மெயின்ரோட்டில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டுக்குள் திடீரென்று 10 அடி நீளம் உள்ள ஒரு பாம்பு புகுந்துவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் அடித்து பிடித்து வீட்டை விட்டு வெளியேறினர்.
இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சண்முகவேல் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின்படி தீயணைப்புதுறை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அதை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் சுவரில் பதுங்கியிருந்த அந்த பாம்பை தீயணைப்புத்துறை வீரர்கள் லாவகமாக பிடித்து காட்டில் கொண்டு விட்டனர்.