Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மணல் திருட்டில் ஈடுபட்ட 3 நபர்கள்…. உரிமையாளர் அளித்த பரபரப்பு புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

மணல் திருடிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் வி.எஸ்.கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மடத்தச்சம்பாடு பகுதியில் சொந்தமான நிலம் ஒன்று உள்ளது. அந்த நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்காக கணேசன் மணல் மற்றும் செங்கற்களை வாங்கி குவித்து வைத்திருக்கிறார்.

அதனை திசையன்விளை பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார், சபரிகண்ணன் ஆகியோர் திருடி சென்று விட்டதாகவும், மேலும் நிலத்தை சுற்றி அடைத்து வைத்திருந்த கம்பி வேலியை பொக்லைன் எந்திரம் மூலம் உடைத்து சேதப்படுத்தியதாகவும் கணேசன் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விஜயகுமார், சபரிகண்ணன் மற்றும் பொக்லைன் எந்திர டிரைவர் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |