கோவிலை திறக்க சொல்லி காவலாளியிடம் கொலை மிரட்டல் விடுத்த ஒருவரை கைது செய்த நிலையில் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் வீரபாண்டியை அடுத்துள்ள கோட்டூர் கிழக்குத் தெருவில் செல்லப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீரபாண்டி பகுதியில் உள்ள கன்னீஸ்வரமுடையார் கோவிலில் இரவுநேர காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி வழக்கம்போல செல்லப்பா பணியில் இருந்துள்ளார். அப்போது அங்கு பழனிசெட்டிபட்டி சேர்ந்த சண்முகம், சுந்தர், வசந்த் ஆகிய 3 வந்துள்ளனர்.
இதனையடுத்து அந்த 3 பேர் கோவிலின் கதவை திறக்க சொல்லி தகராறு செய்துள்ளனர். இதற்கு செல்லப்பா மறுத்ததால் அவரை தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து செல்லப்பா வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சண்முகத்தை கைது செய்துள்ளனர். மேலும் சுந்தர், வசந்த் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.