தலிபான் அரசு ஆப்கானிஸ்தானில் உள்ள தொலைக்காட்சி சேனல்கள் பெண்கள் நடித்துள்ள நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
தலிபான்கள் கடந்த ஆகஸ்டு 15-ஆம் தேதி காபூலை கைப்பற்றி ஆப்கானிஸ்தானை தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து பெண் உரிமை ஆர்வலர்கள் தலிபான்கள் பெண்களுக்கு முழு சுதந்திரம் வழங்க மாட்டார்கள் என்று குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் தலிபான் அரசு ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தொலைக்காட்சி சேனல்களுக்கு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அதாவது தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள தொலைக்காட்சி சேனல்கள் பெண்கள் நடித்துள்ள நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் “ஹிஜாப்” எனப்படும் தலையை மறைக்கும் ஆடையை அணிந்த பிறகு தான் பெண் ஊடகவியலாளர்கள் செய்தி அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதேபோல் ஆப்கானிஸ்தான் உள்ள தொலைக்காட்சி சேனல்களில் வெளிநாட்டு கலாச்சார மதிப்புகளை போற்றும் வெளிநாட்டு படங்கள் ஒளிபரப்பக் கூடாது என்றும் கேட்டு கொண்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிரான நிகழ்ச்சிகளையோ, முகமது நபி குறித்தோ சேனல்களில் ஒளிபரப்பக் கூடாது என்றும் ஆப்கானிஸ்தானில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.