Categories
சினிமா தமிழ் சினிமா

அஸ்வினின் ‘என்ன சொல்ல போகிறாய்’… வெளியான செம அப்டேட்…!!!

என்ன சொல்ல போகிறாய் படத்தின் டப்பிங் பணிகளை அஸ்வின் நிறைவு செய்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அஸ்வின். இதற்கு முன் இவர் சீரியல்கள், குறும்படங்கள், ஆல்பம் பாடல்களில் நடித்து வந்தார். தற்போது ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் மூலம் அஸ்வின் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் தேஜு அஸ்வினி, அவந்திகா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

ashwin kumar completes dubbing for enna solla pogirai teju avantika pugazh

மேலும் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு விவேக்- மெர்வின் இசையமைத்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் என்ன சொல்ல போகிறாய் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக அஸ்வின் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |