கமலின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், மக்கள் நீதி மைய கட்சித் தலைவராகவும் வலம் வருபவர். இவர் அமெரிக்காவிலிருந்து திரும்பும் போது கொரோனா அறிகுறிகள் இருந்ததால் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இவரின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அதில், அவர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாகவும், மேலும் அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவித்து இருக்கின்றனர்.