Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN :வங்கதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான் ….! டி20 தொடரை கைப்பற்றி அசத்தல் ….!!!

வங்காளதேச அணிக்கெதிரான  3-வது டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது .

வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது .இதில் நடந்து முடிந்த முதல் 2 டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான 3 வது டி20 போட்டி டக்காவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் குவித்தது.

பாகிஸ்தான் அணி தரப்பில் வாசிம் ஜூனியர் மற்றும் உஸ்மான் காதிர் ஆகியோர்  தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதன்பிறகு 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இறுதியாக 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது .இதில் அதிகபட்சமாக ஹைதர் அலி 45 ரன்னும், முகமது ரிஸ்வான் 40 ரன்னும் குவித்தனர். வங்காளதேச அணி தரப்பில் கேப்டன் மகமதுல்லா  3 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முழுமையாக கைப்பற்றியது .

Categories

Tech |