Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டின் பூட்டு உடைப்பு…. மர்ம நபர்கள் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…..!

பேராசிரியரின் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள டி.கே.எஸ்.பி.நகரில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் கிருஷ்ணசாமி பெங்களூர்விற்கு சென்றிருந்த நிலையில் கீதா தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த நவம்பர் மாதம் 21 – ஆம் தேதியன்று கிருஷ்ணசாமி மற்றும் அவரது மனைவி வீட்டிற்கு வந்துள்ளனர்.

அதன் பிறகு வீடு திரும்பிய கீதா பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு  அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது வீட்டில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த தங்க மோதிரம், வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து கிருஷ்ணசாமி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |