உலக நாடுகளில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. அதனை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தின. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்டது. மக்கள் சற்று நிம்மதி அடைந்து இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையே தற்போதுதான் குறைந்து வருகிறது. ஆனால் ஜெர்மனியில் கொரோனா 4வது அலை உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஜெர்மனியில் உணவகங்கள், கான்சர்ட் ஹால்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், மீண்டும் அந்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.