Categories
சினிமா தமிழ் சினிமா

1 கோடியா ? 2 கோடியா ? ஏதும் வேண்டாம்…. உதறித்தள்ளிய ரவுடி பேபி …!!

பிரேமம் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான பின்பு நல்ல கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகை சாய் பல்லவி. தொடர்ந்து இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்களும் பெருகிக்கொண்டே இருக்கின்றனர்.

இந்த ஆண்டு வெளிவந்த என்.ஜி.கே திரைப்படத்தைத் தொடர்ந்து எந்தப் படத்திலும் சாய் பல்லவியை காணவில்லை. இந்நிலையில் சாய் பல்லவி செய்த ஒரு காரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். ஒரு பிரபல ஆடை நிறுவனத்தின் விளம்பரத்தில் சாய் பல்லவி நடிப்பதற்கு மறுத்ததே பாராட்டுக்குக் காரணம்.

அந்நிறுவனம் ஒரு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் பேசியும் சாய் பல்லவி விளம்பரத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். இதற்கு முன்பே இரண்டு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் பேசிய ஒரு ஃபேர்னஸ் கிரீம் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க சாய் பல்லவி மறுத்திருக்கிறார். நிறம் குறித்து சாய் பல்லவிக்கு இருக்கும் நிலைப்பாடே இந்த முடிவுக்குக் காரணம்.

ஏற்கனவே ஒரு பேட்டியில் நிறம் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடக் கூடிய ஒன்று என்றும், நாம் வெள்ளையர்களிடம் போய் ஏன் வெள்ளையாக இருக்கிறீர்கள் என கேட்கப்போவதில்லை என்றும் ஏனெனில் அது அவர்களது நிறம் இது நம் இந்திய நிறம் என்று கூறியிருந்தார். அவரது இந்த நிலைப்பாட்டை பலரும் பாராட்டியிருந்த நிலையில் தற்போது கோடி ரூபாய் கொடுத்தும் விளம்பரங்களில் அவர் நடிக்க மறுப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

Categories

Tech |