Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில் தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் தொடர் கனமழையின் காரணமாக திருப்பதிக்கு பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு வர வேண்டாம் என்று தேவஸ்தானம் அறிவித்திருந்த நிலையில் தரிசனம் செய்ய ஏற்கனவே முன்பதிவு செய்து பக்தர்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நவம்பர் 18 முதல் 30 வரை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள் அதே டிக்கெட்டுகளை பயன்படுத்தி ஆறு மாதத்திற்குள் மீண்டும் ஏழுமலையானை வழிபடக்கூடிய சாப்ட்வெர் தயார் செய்யும் பணி  நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |