மத்திய பிரதேச மாநிலம் புர்கான்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் சோக்சி. இவர் தாஜ்மகால் போன்று வீடு கட்டி தனது மனைவிக்கு பரிசளிக்க விரும்பினார். இதற்காக உண்மையான தாஜ்மஹாலை நுணுக்கமாக ஆய்வு செய்த அவர் மேற்கு வங்கம் மற்றும் இந்தூர் பகுதிகளை சேர்ந்த கட்டுமான பொறியாளர்களை வரவழைத்து தாஜ்மகாலைப் போன்றே வீட்டைக் கட்டியுள்ளார். நான்கு படுக்கையறைகள் கொண்ட இந்த வீட்டை கட்டுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆனதாக ஆனந்த் சோக்சி தெரிவித்துள்ளார். வீடு முழுவதும் தரையில் ராஜஸ்தான் கற்கள், இருளிலும் ஜொலிக்கும் லைட்டிங்க் என அசத்தியுள்ளார்.
Categories