Categories
உலக செய்திகள்

இன்று முதல் பயண அனுமதி..! பிரபல நாட்டில் கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம்… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

இங்கிலாந்தில் இன்று முதல் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் பயண அனுமதி வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் கடந்த மாதம் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில் இந்திய தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசி சேர்க்கப்பட்டது. இதையடுத்து இங்கிலாந்து அரசு இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவேக்சின் கொரோனா தடுப்பூசிக்கும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கு முன்பு கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி பெறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தற்போது இங்கிலாந்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இன்று முதல் இங்கிலாந்தில் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கும் பயண அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கிடையே இங்கிலாந்தின் போக்குவரத்து துறை அமைச்சகம் உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளை இன்று முதல் அரசாங்கம் அங்கீகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |