Categories
தேசிய செய்திகள்

“நானும் உன்கூட வரட்டுமா” 28-ன் பிறப்புறுப்பு கட்….. 35 செய்த கொடூரமான செயல்…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த 28 வயது இளைஞர் 35 வயதான யோகா ஆசிரியை தன்னுடைய பிறப்புறுப்பை வெட்டியதாக காவல்நிலையத்தில் கொடுத்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்பூரை சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் யோகா ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கும் 35 வயதான யோகா ஆசிரியை அறிமுகமாகியுள்ளார். இருவரும் ஒரே துறையில் பல ஆண்டுகளாக ஒன்றாக பணியாற்றி வருகின்றனர். அந்தப்பெண் திருமணமாகி கணவரை பிரிந்து தனது குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருக்கமாகியுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நவம்பர் 16-ம் தேதி அந்தப்பெண் இளைஞரை போனில் அழைத்துள்ளார். காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். வீட்டில் இரவு உணவு உண்டுவிட்டு செல்லலாம் எனக் கூறியுள்ளார். சாப்பிட்டு விட்டு இரவு புறப்படும்போது நானும் உன்னுடன் வரட்டுமா எனக் கேட்டுள்ளார். அவரும் சம்மதிக்க இருவரும் ஒன்றாக இளைஞரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். வீட்டிற்கு சென்றதும் தலைவலி ஏற்பட்டுள்ளது. மயக்கம் வந்ததையடுத்து இளைஞர் உறங்கியுள்ளார்.

இந்நிலையில் நள்ளிரவில் இடுப்பு பகுதிக்கு கீழ் வலி ஏற்பட்டுள்ளது. தூக்க கலக்கத்தில் கண் விழித்து பார்த்தபோது அவரது படுக்கை முழுவதும் ரத்தக்கறையாக இருந்துள்ளது. நேரம் செல்ல செல்ல வலி அதிகரித்துள்ளது. பின்னர் தான் தன்னுடைய பிறப்புறுப்பு அறுப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தன்னுடன் இருந்த பெண்ணை தேடியுள்ளார். ஆனால் அவர் வீட்டில் இல்லை. உதவிக்கு ஆட்களை அழைத்துள்ளார். ஆனால் யாரும் உதவி செய்ய இல்லை. இதனையடுத்து போனை எடுத்து அந்தப்பெண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார். போனை எடுத்த பெண் என்னை மன்னித்துவிடு மன்னித்துவிடு எனக் கூறியுள்ளார். பிறகு தான் தன்னுடைய நிலைக்கு இந்தப்பெண் தான் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரது வீட்டுக்கு வந்த அந்தப்பெண் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள அந்தப்பெண்ணை தேடி வருகின்றனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், இளைஞரும் அந்தப்பெண்ணும் மிகவும் நெருக்கமாக பழகிவந்துள்ளனர். இந்நிலையில் இளைஞர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள போவதாக கூறியுள்ளார். தன்னை திருமணம் செய்துக்கொள்ள அந்தப்பெண் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு இளைஞர் மறுக்கவே அந்தப்பெண் இவ்வாறு செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Categories

Tech |