பாகிஸ்தானில் பழங்குடியின தலைவர் உட்பட 4 பேர் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நிர்வாகியும், பழங்குடியின தலைவருமான சர்டார்சடா மீர் முகமது கான் நேற்று மாஸ்டங் மாவட்டத்திலிருந்து குவாடா நகருக்கு காரில் சென்றுள்ளார். இதையடுத்து வாலிகான் நெடுஞ்சாலை வழியாக சென்றுகொண்டிருந்தபோது மீர் முகமது கான் பயணித்த கார் உட்பட இரண்டு கார்களை அங்கு பைக்கில் வந்த இருவர் குறிவைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மீர் முகமது கான், அவரது பாதுகாவலர்கள் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் 4 பேர் இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் யார் ?என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.