Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்துக்கொள்ள வேண்டும்…. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு…..!!

சென்னை ஐகோர்ட்டில் அறக்கட்டளையின் தலைவர் உமர் பாருக் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தமிழக அரசு பிறப்பித்த கட்டுப்பாடுகள் நீடிப்பு உத்தரவை பின்பற்றி அரசு துறைகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கல்வி நிறுவனங்களில் உள்ள பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் மாணவர்கள் நேரடி வகுப்பில் கலந்துகொள்ள முடியாமல் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தடுப்பூசியால் எந்தவித பக்கவிளைவும் இல்லை என்று மத்திய அரசோ அல்லது மாநில அரசோ உத்தரவாதம் அளிக்காத நிலையில் தடுப்பூசி செலுத்தப் கட்டாயப்படுத்தக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மாணவர்களின் நலன் கருதி அவர்களை தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஆசிரியர்கள் தங்கள் சொந்த காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பம் இல்லை என்றால் மாணவர்களின் நலன் கருதி வீட்டிலே இருப்பதுதான் சிறந்தது என்றும் அறிவுறுத்தினர். மேலும் தடுப்பூசி இலவசமாக வழங்க முன்வர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தியுள்ளது. எனவே இது பொது நலன் வழக்கு என்று தெரியவில்லை என அவர் தெரிவித்தார்.

தற்போது இரண்டு தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்ட நிலை நாளை இதற்கு மாற்று வர வாய்ப்புள்ளது. எனவே  மாணவர்களின் நலன் கருதியை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து இந்த மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டனர்.

Categories

Tech |