Categories
தேசிய செய்திகள்

BREAKING: அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு… வெளியான புதிய அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, அகலவிலை நிவாரணம், வீட்டு வாடகை கொடுப்பனவு,குழந்தைகளுக்கான கல்வி கட்டணம் கொடுப்பனவு மற்றும் போனஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகின்றது. அவ்வகையில் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மீண்டும் உயரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு ஊழியர்களின் 28 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமாக 31 சதவீதம் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்றே நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனவே மத்திய அரசு ஊழியர்கள் நவம்பர் மாதம் சம்பள உயர்வு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி அடிப்படை சம்பளமான 18,000 ஆயிரம் ரூபாய்க்கு ஆண்டு அகவிலைப்படி, ரூ.66,960 ஆக இருக்கும். எனவே, அடிப்படை சம்பளம் வாங்கும் மத்திய அரசு ஊழியர்களின் ஆண்டு சம்பளம் ரூ.6,480 அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. மத்திய அரசின் ஊதிய உயர்வு அறிவிப்பால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Categories

Tech |