ஜெர்மனியிலுள்ள ராஸ்டாக் என்னும் உயிரியல் பூங்காவில் போலார் இனத்தை சேர்ந்த ஒரு கரடிக்கு இரண்டு குட்டிகள் பிறந்திருக்கிறது.
ஜெர்மன் நாட்டில் இருக்கும் ராஸ்டாக் என்ற உயிரியல் பூங்காவில், கடந்த 14ஆம் தேதியன்று சிஸ்செல் என்ற போலார் கரடிக்கு இரண்டு குட்டிகள் பிறந்திருக்கிறது. அதில் ஒரு கரடிகுட்டி மட்டும் அரை கிலோவிற்கும் குறைவான எடையில் இருந்துள்ளது.
எனவே, பூங்கா பணியாளர்கள், அதனை அதிக பாதுகாப்புடன் கவனித்து வருவதாக கூறியிருக்கிறார்கள். குட்டிகள் இரண்டும் தாயின் அரவணைப்பில் இருக்கும் அழகான காட்சியை பூங்கா நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ளனர்.