ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில் தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் தொடர் கனமழையின் காரணமாக திருப்பதிக்கு பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு வர வேண்டாம் என்று தேவஸ்தானம் அறிவித்திருந்த நிலையில் தரிசனம் செய்ய ஏற்கனவே முன்பதிவு செய்து தரிசனம் செய்யாத பக்தர்கள் 6 மாதங்களுக்குள் வேறு தேதியில் வந்து தரிசனம் செய்ய தேவஸ்தான இணையதளத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.