Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீர மரணம் அடைந்த…. “தமிழக வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது”…. குடியரசு தலைவரிடம் பெற்றார் மனைவி!!

கல்வான் பள்ளத்தாக்கில் சீன தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரருக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.

பாதுகாப்பு துறையில் வீரதீர செயலுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் இருக்கக்கூடிய குடியரசுத் தலைவர் மாளிகையில் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தற்போது கடந்த 2020ஆம் ஆண்டு சீன ராணுவத்துடன் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.. குறிப்பாக தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்த கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனி என்ற ராணுவ வீரர் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் வீரமரணம் அடைந்தார்.. அவருக்கு வீர் சக்ரா விருது மத்திய அரசு சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது..

இந்த நிலையில் இந்த விருது இன்றைய தினம் பழனிக்கு வழங்கப்பட்டது.. இந்த வீர் சக்ரா விருதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் பழனியின் மனைவி வானதிதேவி பெற்றுள்ளார்.. இதேபோன்று சீன ராணுவத்தில் உயிரிழந்த கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு மகாவீர் சக்ரா விருது என்பது வழங்கப்பட்டது.. 20க்கும் மேற்பட்டோருக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.

கல்வான் பள்ளத்தாக்கில் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.. இந்த தாக்குதல் ஒரு திட்டமிட்ட சதி என இந்திய ராணுவம் குற்றம்சாட்டியது.. இந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக  இந்த விருது வழங்கப்படுகிறது.

Categories

Tech |