Categories
தேசிய செய்திகள்

மக்களே நம்பாதீங்க…. இது ஏமாற்றும் வேலை…. ஏ.ஐ.சி.டி.இ. எச்சரிக்கை….!!

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அதிகாரிகள் என்ற பெயரில் வேலைக்கு தேர்வு நடக்கிறது என்று செய்திகள் வெளியாகிறது. ஆனால் இந்த செய்திகள் உண்மையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏ.ஐ.சி.டி.இ அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், ஏ.ஐ.சி.டி.இ.யில் மண்டல அதிகாரிகள், தலைமை மண்டல அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வு நடக்கிறது என்று ஏ.ஐ.சி.டி.இ. அதிகாரிகள் என்று சொல்லி போலி நபர்கள் வேலை தேடுபவர்களை ஏமாற்றுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அத்தகைய தேர்வு ஒன்றும் ஏ.ஐ.சி.டி.இ யில் நடத்தப்படவில்லை. எனவே போலி நபர்கள் நடத்தும் தேர்விற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று தெரிவித்துள்ளனர். மேலும் அவ்வாறு ஏமாற்றுபவர்கள் யார் மீதும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் புகார் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Categories

Tech |