மத்திய பிரதேச மாநிலம், ரோவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அசோக். கட்டடத் தொழிலாளியான இவர் கணேஷ் மிஸ்ரா என்பவர் வீட்டில் வேலை பார்த்துள்ளார். இதற்காக ரூ.15 ஆயிரம் கூலி பேசப்பட்ட நிலையில் ரூ. 6 ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளனர். மீதி பணத்தை வாங்குவதற்காக சம்பவத்தன்று அசோக் தனது சகோதருடன் கணேஷ் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணேஷ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அசோக்கின் கழுத்தை நோக்கி வீசியுள்ளார்.
அப்போது தனது இடதுகையால் தடுக்க முயன்றபோது அசோக்கின் கை துண்டாகி கீழே விழுந்தது. உடனே அவரது சகோதரர் அசோக்கை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் தலைமறைவாக இருந்த கணேஷை கைது செய்தனர்.