Categories
மாநில செய்திகள்

விவசாயிகளின் கடன் தள்ளுபடி… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி விவகாரத்தில் வரம்பு நிர்ணயம் செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடன் தள்ளுபடி செய்யும் போது அதை யாருக்கு செய்ய வேண்டும் என்பதை வரையறை செய்வதற்கும்,எந்த விவசாயிக்கு கடன் தள்ளுபடி என்பதை முடிவு செய்யவும் அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும் சிறு,குறு விவசாயிகள் என வரையறுத்து 5 ஏக்கர் வரையிலான கடன் தள்ளுபடி செய்தது சரியே என்றும் தெரிவித்துள்ளது. அதேசமயம் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |