தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2021 முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கோவையில் நடைபெற்று வருகிறது. ரூ.34,723 கோடிக்கு 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 74,835 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதையடுத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், வான்வெளி, பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் கோவை கவனம் செலுத்த வேண்டும்.கோவை மாவட்டம் சூலூரில் தொழிற்பேட்டை பூங்கா அமைக்கப்படும்.மின்னணுவியல் துறையில் சிறப்பு கவனம் செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.பொள்ளாச்சியில் ரூ.21 கோடியில் தென்னை நார் பதப்படுத்தும் குழுமம் அமைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.