Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடும்பத்துடன் சென்ற விவசாயி… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தெருவில் திருக்குமரன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் தனது குடும்பத்துடன் கடந்த 20ம் தேதி அணைக்கரைபட்டியில் உள்ள ஏலக்காய் தோட்டத்திற்கு சென்று உள்ளார். இதனையடுத்து மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த திருக்குமரன் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 9 பவுன் நகை திருடு போய் இருந்துள்ளது. இச்சம்பவம் குறித்து திருக்குமரன் கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |