மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று மனம் அமைதியாகவே காணப்படும். சாந்த குணத்துடனே பேசுவீர்கள். செயல்களில் வெற்றியும் இருக்கும். தொழில் வியாபாரம் அபரிதமான அளவில் வளர்ச்சி உருவாகும். தாராள அளவில் பணவரவு இருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்கள் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு போன்றவை இருக்கும். சக ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். இன்று வாகனத்தில் செல்லும்போதும் வெளியூர் பயணத்தின் போதும் கவனமாக இருங்கள். யாருக்கும் கடன்கள் ஏதும் கொடுக்காதீர்கள். வாக்குறுதிகளையும் தராதீர்கள்.
இன்று மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து இருக்கும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தையும் தொடங்குங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்