Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய புதிய மசோதா…!!!

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் 1 வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி பிரதமர் மோடி அவர்கள் இந்த 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில் புதிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வகையில் புதிய மசோதா உருவாக்கப்பட்டு ஒப்புதலுக்காக பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |