Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள்…. விவசாயிகள் சங்கத்தினரின் போராட்டம்…. தர்மபுரியில் பரபரப்பு….!!

நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள காரிமங்கலத்தில் மொரப்பூர் சாலையில் தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பாக நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாநில தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் முனிராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் முனியப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கதிர்வேல், மாநில செய்தி விளம்பர செயலாளர் பெருமாள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

அப்போது போராட்டத்தில் “கடந்த 20 வருடங்களாக தும்பலஅள்ளி அணை வறண்டு கிடக்கிறது. இந்த அணைக்கு நீர் கொண்டுவந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க பஞ்சப்பள்ளி அணையிலிருந்து தும்பலஅள்ளி அணை, கம்பைநல்லூர் ஆறு  வரை நீர்வரத்து கால்வாயில் உள்ள முட்புதர்கள், சீமைகருவேல மரங்கள் ஆகியவற்றை தூர்வார வேண்டும். அதன்பின் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் மழைக்காலத்தில் வீணாகும் தண்ணீரை சேமிக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

Categories

Tech |