தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக கணினி வழியில் நடைபெறும் தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஆதார் எண் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கொள்குறிவகை கணினி வழித் தேர்வு, துறைத் தேர்வுகள் 2021 ஆம் ஆண்டு மே மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் ஆதார் எண்ணை கட்டாயமாக பதிய வேண்டும்.
டிசம்பர் 2020 ஆண்டிற்கான துறைத்தேர்வுகள்2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ளது. அதனால் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். விண்ணப்பங்களை இணையத்தில் சமர்ப்பிப்பதற்கான இறுதிநாள் டிசம்பர் 21. அனைத்து கொள்குறி வகை தேர்வுகளும் கணினிவழி முறையிலும், அனைத்து விரித்துரைக்கும் வகை தேர்வுகளும் ஏற்கனவே உள்ள முறையான தேர்வுத் தாளில் எழுதும் வகை தேர்வாக நடைபெறும்.
வணிகவரித் துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை காண திருத்தப்பட்ட பாடத்திட்டம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. துறைத்தேர்வு விண்ணப்பதாரர்களுக்கான விதிமுறைகள், பாடத்திட்டம், தேர்வு அமைப்பு முறை, தேர்வின் பெயர், தேர்வு குறியீடு, தேர்வுக்கான கட்டணம், கால அட்டவணை போன்றவற்றை தேர்வாணையத்தின் இணையதளமான https://www.tnpsc.gov.in/ மற்றும் www.tnpscexams.net என்ற இணையத்தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.