அண்ணாநகரில் திமுக பிரமுகர் கொலையில் ரவுடி லெனின் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணாநகர் டி.பி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார் 48 வயதாகும் இவர் திமுக பிரமுகர் ஆவார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபயிற்சி சென்ற போது அண்ணா நகர் போலீஸ் நிலையம் முன்பு மர்ம நபர்கள் சிலரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கணவன் மனைவி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிரபல ரவுடி லெனின் தலைமறைவாக இருந்து வந்தான்.
இதனை தொடர்ந்து லெனின் அண்ணாநகர் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அவனை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது தப்பிச் செல்வதற்காக லெனின் பாலத்திற்கு அடியில் குதித்துள்ளார். இதனால் காயம் அடைந்த லெனினை மீட்டு போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.