அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது இன்று தொடங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது, இன்று தொடங்கி வரும் 29ம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 4 வீரர்கள் மற்றும் 5 வீராங்கனைகள் கொண்ட அணி கலந்து கொள்கிறது. இந்த ஒன்பது நபர்களும், தனிநபர், இரட்டையர் மற்றும் கலப்பு அணிகள் போன்ற பிரிவில் விளையாடுவார்கள்.
சரத் கமல், அந்தோணி அமல்ராஜ், சத்தியன் ஞானசேகரன், ஹர்மீத் தேசாய் ஆகிய 4 வீரர்களும் ஆடவர் பிரிவில் விளையாடுவார்கள். அர்ச்சனா காமத், மதுரிகா பட்கர், அஹிமா முகர்ஜி, சுதிர்தா முகர்ஜி மற்றும் மணிகா பத்ரா ஆகிய ஐவரும் மகளிர் பிரிவில் களமிறங்கவுள்ளனர்.