தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இது ஒருபுறமிருக்க சென்னையில் தொடர் மழை காரணமாக தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு வருகின்றது. 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது மழை மற்றும் புயல் காரணமாக சரசரவென விலை உயர்ந்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து குறைவாக இருப்பதால் இப்படி விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது சந்தையில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதுவே விலை உயர்வுக்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.