பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ‘பிக்பாஸ் சீசன்5’ நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடைசியாக இசைவாணி எலிமினேஷன் ஆனார். இதனிடையே, பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு நிறைய டாஸ்க் கொடுத்து வருகிறார்.இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இந்த புரோமோவில், போட்டியாளர்களுக்கு பள்ளிப்பருவ டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதனையடுத்து, இந்நிகழ்ச்சியில் இரண்டாவது வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிரபல நடன இயக்குனர் அமீர் நுழைந்துள்ளார். இந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.