‘அட்ராங்கி ரே’ படம் ஹாட்ஸ்டார் OTT யில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் போன்ற திரையுலகிலும் படங்கள் நடித்து வருகிறார். இவர் நடித்த பாலிவுட் திரைப்படம் தான் ”அட்ராங்கி ரே”. இந்த திரைப்படத்தில் அக்ஷய் குமார், சாரா அலிகான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் OTT யில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும், இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.