Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “குறுக்கீடுகள் விலகி செல்லும்”.. பயம் கொஞ்சம் இருக்கும்..!!

கன்னிராசி அன்பர்களே..!! இன்று பணிகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். இன்று நட்பு வட்டம் விரிவடையும். வாழ்வில் இருந்த குறுக்கீடுகள் விலகி செல்லும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். உபரி பண வருமானம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு விவகாரங்களில் அனுகூலத் தீர்வு வந்து சேரும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று எதிலும் பயம் கொஞ்சம் இருக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் போன்றவை ஏற்படும்.

சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டி இருக்கும். ஜீரண கோளாறு போன்ற ஏதாவது ஆரோக்கிய குறைபாடு கொஞ்சம் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். செலவு கொஞ்சம் அதிகரிக்கும். அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்கும் பொழுது கவனமாக இருங்கள். பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலைக் கொடுக்கும். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள்.

இன்றையநாள்  ஓரளவு வெற்றி பெறும் நாளாக இருக்கும். இன்று முக்கியமான  பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று முருகன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை மேற்கொள்ளுங்கள். காரியங்கள் அனைத்துமே வெற்றியை கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |