உலக நாடு முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் ஒரு ஸ்மார்ட் போனை வைத்துக்கொண்டு அதில் ஆன்லைன் விளையாட்டை தொடர்ந்து விளையாடி வருகின்றனர். இந்த ஆன்லைன் விளையாட்டில் பணம் மற்றும் நேரத்தை செலவழித்து ஆர்வமாக விளையாடுகின்றனர். இந்நிலையில் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ஆன்லைன் விளையாட்டுகளில் பொது மக்களை பாதிக்காமல் இருக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தும் ஆன்லைன் விளையாட்டை அதிக ஆர்வம் கொண்டு விளையாடி பணம், மனம் மற்றும் வாழ்க்கையை சீரழிகின்றனர். இந்த ஆன்லைன் விளையாட்டில் பலரும் உயிர் இழந்துள்ளனர் என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
இதையடுத்து ஆன்லைன் சம்பந்தமாக எழுந்த புகாரின் அடிப்படையில் பப்ஜி விளையாட்டு விளையாட அரசு தடை விதித்தது. ஆனால் பஜ்ஜி விளையாட்டுக்கு பதிலாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய பெயரில் வெவ்வேறு விளையாட்டுகள் வந்துள்ளது. எனவே பாதிப்பை ஏற்படுத்தும் ஆன்லைன் விளையாட்டுகளை நம் நாட்டில் தடை விதிக்க வேண்டும்.
அதைத்தொடர்ந்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் கணினி மற்றும் மொபைல் வாங்கி வந்து வீட்டில் நலன் மற்றும் நாட்டின் நலன் கருதி பயன்படுத்த வேண்டும். ஆனால் அதில் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடக் கூடாது என்று அன்புடன் கூற வேண்டும். எனவே ஆன்லைன் மூலம் விளையாட்டுகளை கொண்டுவந்து பணம் பறிக்கும் மற்றும் அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையை வீணாக்கும் தொழிலை மத்திய அரசு முற்றிலுமாக முடக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.