விருச்சிகம் ராசி அன்பர்களே..!! சிலர் உங்களுக்கு தவறான ஆலோசனையை சொல்லக்கூடும். அவப்பெயர் வராத வகையில் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். பணவரவு கிடைப்பதில் தாமதமும் ஏற்படும். தியானம் தெய்வ வழிபாடு மன அமைதி பெற உதவும். இன்று பயணங்களின் போதும் வாகனத்தில் செல்லும்போதும் எச்சரிக்கையாகவே இருங்கள். சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உருவாகும்.
மிகவும் வேண்டியவரை பிரிய வேண்டியிருக்கும். மற்றவர்களுக்கு வழியேசென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும். அரசியல் துறையினர் மனத்திருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன்களைப் பெறக்கூடும். பயணங்கள் செல்ல நேரிடும். மனதிற்கு பிடித்தவரை சந்திக்கவும் நேரிடும். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாக இருக்கும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு சிறப்பான நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகன் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்