பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரைத் தடுக்க காவல்துறையினர் கடல் பகுதியில் ரோந்து செல்லும் ஒரு திட்டத்தை உள்துறை செயலர் முன்வைத்துள்ளார்.
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைய முயற்சி செய்கின்றனர். இதனை தடுப்பதற்காக பிரித்தானிய உள்துறை செயலரான பிரீத்தி பட்டேல் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார். அதாவது புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக பிரித்தானியா பிரான்சுக்கு பெரும் தொகை கொடுத்தும், ஆங்கிலக்கால்வாயைக் கடந்து நுழைய முயற்சி செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. எனவே பிரித்தானிய காவல்துறையினர் பிரான்ஸ் கடற்கரையில் ரோந்து செல்லும் ஒரு திட்டத்தை பிரீத்தி முன்வைத்துள்ளார்.
இவ்வாறு ரோந்து செல்வது பிரான்சின் இறையாண்மையை மீறும் செயல் ஆகிவிடும் என்று கூறி அந்த திட்டத்தை நிராகரித்துவிட்டதாக பிரீத்தி தெரிவித்துள்ளார். எனினும் பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் காவல்துறையினர் இணைந்து ஆங்கிலக் கால்வாயில் ரோந்து செல்லும் ஒரு திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக பிரீத்தி தெரிவித்துள்ளார்