ஜி.வி.பிரகாஷின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்காக காத்திருக்கின்றன.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், இசை அமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் ‘வணக்கம் டா மாப்பிள்ளை’ நேரடியாக டிவியில் வெளியானது. இதனையடுத்து, ஜி.வி.பிரகாஷின் ”பேச்சுலர்” திரைப்படம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
மேலும், இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ”ஜெயில்” திரைப்படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, இவர் நடிப்பில் ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, இடிமுழக்கம் போன்ற படங்களும் அடுத்தடுத்து ரிலீஸுக்காக காத்திருக்கின்றன.