கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று சிலரது பேச்சு உங்களை சங்கடப்படுத்த கூடும். பொது இடங்களில் மட்டும் அதிகம் பேசவேண்டாம். தொழில் வியாபார நடைமுறை சுமாராகத்தான் இருக்கும். பணவரவு சராசரி அளவில் இருக்கும். சுற்றுப்புற தொந்தரவினால் நித்திரை கொஞ்சம் தாமதமாகலாம். இன்று கணவன் மனைவிக்கிடையே இருந்த மனகசப்பு மாறும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும்.
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவுகள் கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது மட்டும் அவசியம். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளும் வசூலாகும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாகவே இருக்கும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். உங்களுடைய சாமர்த்தியமான பேச்சு மூலம் வாடிக்கையாளர்களிடம் நல்ல மதிப்பை பெறக்கூடும். இன்று குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
இன்று முக்கியமான பணியை மட்டும் நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிற ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். இன்று வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய காரியங்களைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்