Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காணாமல் போன மோட்டார் சைக்கிள்…. உரிமையாளர் அளித்த புகார்…. கைது செய்த போலீஸ்….!!

மோட்டார் சைக்கிள் திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜேஷ் பாளையங்கோட்டை மார்க்கெட்டில் பெருமாள் கீழரத வீதியில் உள்ள உறவினர் வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார்.

இந்நிலையில் மோட்டார் சைக்கிள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராஜேஷ் இதுகுறித்து ராஜேஷ் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியது புதுமனை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசிக்கும் மாரிமுத்து என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மாரிமுத்துவை கைது செய்ததோடு அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |