Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ :”இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது சிறப்பான உணர்வாக உள்ளது “….! அஜாஸ் படேல் ஓபன் டாக் ….!!!

இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் கான்பூரில் தொடங்குகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது .இந்நிலையில் இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் கான்பூரில் நடைபெறுகிறது .இப்போட்டியில் நியூசிலாந்து அணியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் களமிறங்குகிறார் .மும்பையில் பிறந்த இவர் தனது         8 வயதில் குடும்பத்துடன் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்து உள்ளார்.

தற்போது 33 வயதான அஜாஸ் படேல் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவதை பற்றி  கூறும்போது,” இந்தியாவில் இதற்கு முன்பு பார்க்காத இடங்களை பார்க்கும் போது அழகாக உள்ளது.அதோடு இந்திய அணிக்கு எதிராக இந்தியாவில் விளையாடுவது சவாலானதாக இருக்கும். அதேசமயம் இந்திய மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் .இதனால் இந்திய அணிக்கு எதிராக என்னுடைய அதிகபட்ச பங்களிப்பை அளிப்பேன் .அதே சமயம் இந்தியாவில் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது சிறப்பாக உணர்வாக உள்ளது” இவ்வாறு அவர் கூறியுள்ளார் .இதுவரை நியூசிலாந்து அணிக்காக 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 26 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |