அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இயக்குனர் எச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹுமா குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். போனிகபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் மற்றும் அதிரடியான கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் ரிலீஸ் தேதியை குறிப்பிடவில்லை. இந்நிலையில் வலிமை படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ஆம் தேதி ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.