Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசுக்கு எதிராக மெகா கூட்டம்…. காங்கிரஸின் புதிய திட்டம்…. டெல்லியே குலுங்க போகுது….!!!!

டெல்லியில் பெட்ரோல், டீசல் உயர்வு மற்றும் பணவீக்கம் ஆகியவற்றை கண்டித்து மாபெரும் கூட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்த கூட்டம் பிரியங்கா காந்தி தலைமையில், டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சப் காங்கிரஸ் தலைவர் சித்து, முன்னாள் ஹரியானா முதல்வர் பூபிந்தர் ஹீடா, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் கட்சித் தலைவர் சச்சின் பைலட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து ராம்லீலா மைதானத்தில் இந்த கூட்டத்தை நடத்த காங்கிரஸ் அரசு திட்டமிட்டு இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. ஒருவேளை மத்திய அரசு அனுமதிக்கவில்லை என்றால் துவாரகா மைதானத்தில் கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. தீபாவளிக்கு முன் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சுங்க வரியை குறைக்க உத்தரவிட்டது.

ஆனால் பெரும்பாலான மாவட்டங்களில் இன்னும் 100 க்கு கீழ் விலை குறையாமல் அதே விலையில் தான் விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தற்போது தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மேலும் 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தான் காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு பிரச்சினையும் பெரிதாக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இந்த காங்கிரஸ் கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.

Categories

Tech |