தக்காளி விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் பண்ணைப் பசுமை காய்கறி கடைகளில் கிலோ 85 முதல் ரூ 100 வரை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதன் காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தக்காளியின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.. இதற்கு முன்னதாக தக்காளியின் விலை குறைந்த விலையில் கிடைத்த நிலையில், திடீரென ஆப்பிள் விலைக்கு நிகராக உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது, வெளிச்சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 110 முதல் ரூபாய் 130 வரை விற்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கூட்டுறவுத்துறை நடத்தும் பண்ணை பசுமை கடைகள் மூலம் தக்காளி குறைவான விலையில் கிடைக்கிறது. பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்..
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், கூட்டுறவுத் துறை சார்பில் குறைந்த விலையில் தக்காளியை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிச் சந்தைகளில் தக்காளி விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் பண்ணைப் பசுமை காய்கறி கடைகளில் கிலோ 85 முதல் ரூ 100 வரை விற்பனை செய்யப்படும். 2 நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் உள்ளிட்ட 65 பண்ணை பசுமைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும். குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக நாளொன்றுக்கு 15 டன் தக்காளி கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, தூத்துக்குடி, மதுரை, திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சை, நெல்லை, திருப்பூர், ஈரோடு, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.. அன்றாடம் பயன்படுத்தும் தக்காளி ஆப்பிள் விலைக்கு அதிர்ச்சி அடைந்து செய்தியாக வெளிவந்தது. தற்போது அரசால் ஒரு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.