‘கயல்’ சீரியல் ஒளிபரப்பான முதல் வாரத்திலேயே டி.ஆர்.பியில் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில், தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் ஒன்று ”கயல்”. சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்நிலையில், இந்த சீரியல் ஒளிபரப்பான முதல் வாரத்திலேயே டி.ஆர்.பியில் மற்ற தொலைக்காட்சியின் சீரியல்களை முறியடித்து முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.