வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வ பசுபதி என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஐ.டி.ஐ. படித்து முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது செல்பசுபதி விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் பசுபதி ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இதனை பசுபதியின் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த செல்வபசுபதி அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது தெரியாத அவரது பெற்றோர் செல்வ பசுபதியை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கிணற்றில் பிணமாக கிடந்த செல்வ பசுபதியின் உடலை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து களக்காடு காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் செல்வகணபதியின் உடலை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.