தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன . அதனால் மக்கள் மீண்டும் வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் அரசு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் தனியார் துறைகள் சார்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டும் அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மற்ற பகுதிகளை தொடர்ந்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் திட்ட செயலாக்க அலுவலகம் மற்றும் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து வருகின்ற 27 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. பல முன்னணி தனியார் நிறுவனங்கள் தகுதியான மற்றும் திறமையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.