இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பான நாடு அல்ல என அமெரிக்கா கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,
உலகத்தில் இருக்கக்கூடிய பெரிய மாநகரத்தில் இன்சிடென்ட் ஆப் ரேப் per 1 லட்சம் என்பது நியூயார்க் சிட்டியில் தான் அதிகம், அதனால் அமெரிக்காவில் இதை பற்றி பேசுவதற்கு தகுதியே கிடையாது, 1 லட்சம் மக்கள் மேலே இருக்கக்கூடிய பெரு மாநகரத்தில் உலகத்தில் பாலியல் பலாத்காரம் அதிகம் நடக்கக்கூடிய மாநகரம் நியூயார்க் சிட்டி தான் நம்பர் 1,
அதனால் அமெரிக்கர்கள் அங்க உகர்ந்துகொண்டு இந்தியாவை பற்றி தரைகுறைவா இதெல்லாம் பேசவே கூடாது, இந்தியாவை பொறுத்தவரை தவறு நடக்கிறது, தவறு நடக்கும்போதெல்லாம் அதை சரி செய்வதற்கு புதிய சட்டங்கள் கொண்டு வருகின்றார்கள், காவல்துறைக்கு நல்ல ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறார்கள்.
நம்முடைய பாரத பிரதமர் நரேந்திரமோடிஜி அவர்கள் 15 மணிநேரம் நம்முடைய நாட்டில் இருக்கக்கூடிய எல்லா டிஜிபி, தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு உள்பட எல்லாருமே லக்னோவிற்கு சென்று 15 மணிநேரம் மோடிஜியை தனியாக சந்தித்து பேசி இருக்கிறார்கள். ஒரு ஒரு முறையும் மத்திய அரசைப் பொருத்தவரை எல்லா மாநிலங்களிலும் காவல் துறையை மேம்படுத்துவதற்கு தான் முயற்சி செய்கிறார்கள்.
அமெரிக்கா ஒரு ஸ்டேட்மென்ட் கொடுப்பதற்கு முன்னாடி, ஒரு வெள்ளை மாளிகையோ, ஒரு கண்ணாடி கூண்டுக்குள் உட்கார்ந்து கொண்டு கல் எரிய கூடாது. ஏனென்றால் அமெரிக்கா பேசுவதற்கு தகுதி கிடையாது. அதனால் அவர்கள் முக்கிய குறிக்கோள் என்னவென்றால் இந்தியாவிற்கு சுற்றுலா வரக்கூடாது, இந்தியா வளர்ச்சி அடைய கூடாது என்பதற்காக இதுபோன்ற கருத்துக்களை பரப்புகிறார்கள். இந்தியா என்பது ஒரு லட்சத்திற்கும் மேல் பெண் தெய்வங்கள் இருக்கின்ற தேசம்,
பெண்களுக்கு மரியாதை கொடுக்கக் கூடிய தேசம், நம் நாட்டில் எல்லா பெண்களும் பாதுகாப்பாகத் தான் இருக்கிறார்கள், எந்த பெண்ணுக்கும் அந்த மாதிரி ஐயம் வரக்கூடாது. தவறு நடக்கும் போது சரி செய்வதற்கு கடுமையான சட்டங்கள் நம்மிடம் இருக்கிறது.முன்னாள் அமைச்சர் அவர்கள் நான் உட்பட எல்லோருமே 21 மாநகராட்சியில் போய் நம்முடைய விருப்ப மனுக்களை வாங்கி இருக்கிறோம்.
எங்களுடைய ஒரே நோக்கம் வந்து மக்களுக்கு பணி செய்வதற்கு நல்ல வேட்பாளர்களை தயார் செய்ய வேண்டும், கண்டெடுக்க வேண்டும் என்பதுதான், நாங்கள் தயாராக இருக்கிறோ.ம் மாநில அரசு எப்போது அறிவித்தாலும் கூட தேர்தலை எதிர்கொண்டு மக்களுக்கு நல்ல வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வெற்றி வேட்பாளராக மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என தெரிவித்தார்.