Categories
மாநில செய்திகள்

சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள்…. சிற்றூர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழக சட்டப்பேரவையில் போது முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் சாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள சிற்றூர்களுக்கு  வளர்ச்சிப் பணிகளை மேம்படுத்துவதற்காக ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்ற அறிவித்தார். இந்த அறிவிப்பினை செயல்படுத்துவதற்காக  சாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள கிராமங்களுக்கு மாவட்டத்தில்  3 ஊர்களுக்கு விதம் ரூ. 10 லட்சம் வழங்குவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், சாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள கிராமங்களை பற்றிய விவரங்களை பழங்குடியின நல அலுவலர் மற்றும் ஊராட்சித் துறை உதவி இயக்குனர் ஆகியோர் சேகரிக்க வேண்டும். அதன் பிறகு சேகரிக்கப்பட்ட விபரங்களை சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் சரிசெய்த பின்பு மாவட்ட ஆட்சித் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்ப வேண்டும்.

அதன் படி சமத்துவம் மயானம் பயன்பாட்டில் உள்ள கிராமங்களுக்கு மட்டும் இந்த பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டத்தில் சென்னையை தவிர்த்து மற்ற  37 மாவட்டங்களில் 111 கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுதொகை வழங்கப்படும். இதற்கு அரசு ரூ.11,10,00,000 நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |